செய்திகள்

இன்றோடு 14 ஆண்டுகள்: தனது முதல் படப்பிடிப்பு குறித்து நடிகை சமந்தா நெகிழ்ச்சி!

DIN

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

மேலும், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக  அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக நியூயாா்க், நியூஜொ்சி மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சோ்ந்த இந்தியா் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) சாா்பில் இந்திய தின அணிவகுப்பு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

நியூயாா்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் ஆக.20-ஆம் நாள் நடைபெற்ற இந்திய தின அணிவகுப்புக்கு ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் தலைமை வகிக்க சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா பங்கேற்றார். 

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நியூயார்க்தான் கனவுகளை உருவாக்கும் எனக் கூறுவார்கள். எனது முதல்படத்தின் படப்பிடிப்பு இங்குதான் நடைபெற்றது. சிறிய பெண்ணாக எனக்கு இதை எப்படி செய்து முடிப்பேனென கவலையாக இருந்தது. ஆனால் மிகப் பெரிய கனவுகளுக்கு தைரியம் மட்டுமே போதுமானது. இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவு” எனப் பதிவிட்டுள்ளார். 

சமந்தா நடித்த முதல் படம் ‘ஏ மாய சேசாவே’ (விண்ணைத்தாண்டி வருவாயா -தெலுங்கு) அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சமந்தாவின் காட்சிகள் அமெரிக்காவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், ப்ரூக்ளின் பாலம், மன்ஹாட்டனிலுள்ள சென்ட்ரல் பூங்காவிலும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT