விஜய் 68 படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிருவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இந்த படத்தில் விஜய்யின் மற்றொரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகிய முக்கிய பிரபலம்!
மேலும், விஜய் 68 படத்துக்கு சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.