செய்திகள்

வெளிநாட்டு முன்பதிவுகளில் அசத்தும் ஜவான்: முதல்நாளே ரூ.50 கோடி வசூல்?

வெளிநாடுகளில் ஜவான் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகளின் விற்பனை புதிய சாதனையைப் படைத்து வருகிறது.

DIN

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.  மேலும், ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் மீண்டும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, அமீரகம், ஓமன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் ஜவான் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளின் விற்பனை மிகப்பெரிய அளவில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  திரைப்படம் வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் முன்பதிவுகள் துவங்கிவிடும்.

இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் வெளிநாடுகளில் முதல்நாளிலேயே ஜவான் ரூ.50 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

SCROLL FOR NEXT