முகப்பு
செய்திகள்

விஜய் 68: அடுத்த வாரம் லண்டன் செல்லும் விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய், அடுத்த வாரம் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
நடிகர் விஜய் (கோப்புப் படம்)
பகிர்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய், அடுத்த வாரம் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் விஜய் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதை தொடர்ந்து, ‘டெஸ்ட் போட்டோஷூட்’ அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் இந்த வார இறுதியில் லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய் 68 படத்துக்கு சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →