நடிகை கிரண் 
செய்திகள்

லியோவில் நடிகை கிரண்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளதாக நடிகை கிரண் தெரிவித்துள்ளார்.

DIN

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளதாக நடிகை கிரண் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு வெளியான சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களும், படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை கிரண், லியோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, லியோ படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களும், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சிறப்பு தோற்றத்தில் நடிகை கிரண் நடித்துள்ளது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT