செய்திகள்

எல்சியூ நிச்சயம்?: லியோ பட டாட்டூடன் நடிகை த்ரிஷா!

நடிகை த்ரிஷாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை, மலேசியா, சென்னை என பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. 

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார். இதில் கையில் பழரசத்துடன் இருக்கு புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் கையில் லியோ டாட்டூ இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

விக்ரம் படத்தில் சூர்யாவின் (ரோலக்ஸ்) 'தேள்' டாட்டூ போன்றே த்ரிஷாவின் கையில் இருப்பது ரசிகர்களை ஆர்வத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் படம் நிச்சயமாக எல்சியூதான் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT