செய்திகள்

ஜெய் பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது இல்லை?: நானி, பி.சி. ஸ்ரீராம் உள்பட பலரும் எதிர்ப்பு!  

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை என சினிமா பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

DIN

நாட்டின் 69-வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன். இதில் மொழிவாரித் தேர்வில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி  தேர்வாகியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம் படங்களுக்கு எந்த ஒரு விருதும் தரப்படவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெய் பீம் படம் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஜெய் பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது தரவில்லை என பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

நடிகர் அசோக் செல்வன், “கடைசி விவசாயி படம் நல்ல தேர்வு ஆனால் ஏன் ஜெய் பீம் படத்திற்கு எந்த விருதுமில்லை?” எனப் பதிவிட்டுள்ளார். 

பிரபல தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெய் பீம் என பதிவிட்டு இதயம் உடையும் எமோஜியை பதிவிட்டுள்ளார். 


இயக்குநர் சுசீந்திரனும் ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுக்கப்படாதது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT