செய்திகள்

தெலுங்கு சீரியலுக்கு செல்லும் ஈரமான ரோஜாவே நடிகை!

ஈரமான ரோஜாவே தொடர் முதல் சீசன் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகையான ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் தெலுங்கு மொழி சீரியலில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களைக் கவரும் வகையில் பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்தவகையில், ஈரமான ரோஜாவே தொடர் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளைய தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.

ஈரமான ரோஜாவே தொடர் முதல் சீசன் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனில் திரவியம் ராஜகுமரன், ஸ்வாதி, சித்தார்த், கெபிரியல்லா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

ஈரமான ரோஜாவே தொடரில் நடித்ததன் மூலம் ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த், சமூக வலைதளத்தில் தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார். அவ்வபோது அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளை பதிவிட்டு வருவது வழக்கம். 

தற்போது இவர் தெலுங்கு மொழியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜமிலி கோசம் ஆகாஷமல்லே என பெயரிடப்பட்டுள்ள தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

இதனால்,  ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த்தின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT