பவன் கல்யாணின் ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தின் முக்கிய அறிவிப்பு செப்.2-ல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
2022இல் பவன் கல்யாண் நடித்த பீம்லா நாயக் திரைப்படம் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றது. தற்போது ஹர ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் ஆகிய படங்களில் பவன் கல்யாண் ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்னதாக, நடிகர் சாய் தரம் தேஜூடன் பவன் கல்யாண் நடித்த ப்ரோ திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.
தற்போது பவன் கல்யாணின் புதிய படமான தே கால் ஹிம் ஓஜி படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, எம்ரான் ஹாஸ்மி, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டிவிவி எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் ஜவான் இசை வெளியீட்டு விழா?
இந்த நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்போவது இல்லை எனத் தெரிவித்துள்ளது. கிளிம்ஸ் விடியோ அல்லது டீசரை செப்.2 ஆம் தேதி படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.