செய்திகள்

கோலங்கள் புடவைபோல... பிரபலமாகும் எதிர்நீச்சல் வேட்டி!

DIN


சின்னத்திரை தொடரில் நாயகி கட்டும் புடவை பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகி கேள்வியுற்றிருப்போம். ஆனால், சின்னத்திரை தொடர் நடிகர் கட்டும் வேட்டி தற்போது பொதுமக்களிடம் பிரபலமாகியுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் கதிர் பாத்திரத்தில் நடிப்பவர் கட்டிவரும் வேட்டிகள் பொதுமக்களை தற்போது வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

எதிர்நீச்சல் தொடரில் நான்கு மருமகள்களில் ஒருவராக நடித்துவரும் நந்தினி பாத்திரத்தின் கணவர்தான் கதிர். அதாவது ஹரிப்பிரியா இசைக்கு கணவராக நடிக்கும் ஜெகதீஸ். 

எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனின் வலதுகை போல செயல்பட்டுவரும் சகோதரன். மிகுந்த கோவக்கார கணவராக எதிர்நீச்சலில் நல்ல நடிப்பை வழங்கி வருகிறார். நந்தினி - கதிர் இடையிலான காட்சிகள் ரசிகர்களை எளிதில் கவரும் வகையிலான கணவன் - மனைவி காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும். 

நந்தினி - கதிர்

எதிர்நீச்சல் தொடர் முழுக்க கதிர் கலர் கலரான வேட்டிகளைக் கட்டி வருகிறார். சட்டைக்கு ஏற்ப வேட்டிகளை தேர்வு செய்து கட்டி வருகிறார். திருமண காட்சியில் பலர் பட்டுத்துணி உடுத்தியிருந்தாலும்சரி, கதிருக்கு எப்போதும் வண்ணமயமான அந்த காட்டன் வேட்டிதான். 

இதனால், கதிரின் வேட்டி பொதுமக்கள் மத்தியில் மிகவும் கவனம்பெற்றுள்ளது. கதிர் கட்டிவரும் வேட்டிகளை எங்குதான் வாங்குகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு ரசிகர்களை வேட்டி கவர்ந்துள்ளது. 

எதிர்நீச்சல் தொடரை இயக்கிவரும் இயக்குநர் திருச்செல்வம் இதற்கு முன்பு கோலங்கள் தொடரை இயக்கியவர். அதில் நாயகியாக நடித்த தேவையானி கட்டிவரும் புடவைகள் அப்போது மிகவும் பிரபலம். 

துணிக்கடைகளில் கோலங்கள் புடவை என்று விளம்பரப் பலகை போட்டு விற்கும் அளவுக்கு பிரபலமானது. பெண்களும் கோலங்கள் புடவை வேண்டும் என கேட்டு வாங்கும் அளவுக்கு பிரபலமடைந்திருந்தது. 

அந்தவகையில் தற்போது எதிர்நீச்சல் வேட்டி பிரலமாகியுள்ளது. மைனரு வேட்டி கதிர் என்று பலர் ஜெகதீஸை அழைக்கும் அளவுக்கு வேட்டி பெயர் பெற்று கொடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT