கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகளில்....6 திரைப்படங்கள்!

இந்த வாரம் செப்டம்பர் 1 ஆம் தேதி எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளதை என்பதைக் காணலாம். இந்த வாரம் ஆறு தமிழ் மொழி திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

DIN

இந்த வாரம் செப்டம்பர் 1 ஆம் தேதி எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளதை என்பதைக் காணலாம். இந்த வாரம் ஆறு தமிழ் மொழி திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

குஷி
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுக்கு சமந்தா ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.

கருமேகங்கள் கலைகின்றன

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப் படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஈ.வீரசக்தி தயாரித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கிக்

கிக் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். இப்படத்துக்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்கி மேன் 

யோகிபாபு நடிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லக்கி  மேன். இப்படத்தில் யோகி பாபு உடன்  வீரா பாபு, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரங்கோலி 

இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரங்கோலி'. இந்தப் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பரம்பொருள்

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பரம்பொருள். இப்படத்தில் கதாநாயகனாக அமிதாஷ் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்.1ஆம் நாள் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT