செய்திகள்

வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற ஷாருக்கான்!

ஜவான் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு நடிகர் ஷாருக்கான் சென்றுள்ளார்.

DIN

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இன்று சென்னையில் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு நடிகர் ஷாருக்கான் சென்றுள்ளார். அங்கு,  ஜவான் படத்தின் வெற்றிக்காக அவர் பிராத்தனை செய்துள்ளார். 

இந்த ஆண்டில் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு இரண்டாவது முறையாக ஷாருக்கான் சென்றுள்ளார். முன்னதாக, பதான் படத்தின் வெளியீட்டிற்காக சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT