செய்திகள்

காதலியை அறிவிக்கும் விஜய் தேவரகொண்டா?

நடிகர் விஜய் தேவரகொண்டா தன் காதலி யார் என்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

DIN

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இவரை நட்சத்திர நடிகராக மாற்றியது. அதன்பின் கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரெட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். 

மேலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தின் மூலம் பான் இந்திய நாயகனாக மாறினார். ஆனால், அப்படம் கடும் தோல்வியடைந்தது. 

தற்போது, சமந்தாவுடன் குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளதால் இதற்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நிறைய நடக்கிறது. ஆனால், இந்த ஒன்று உண்மையிலேயே சிறந்தது. விரைவில் அறிவிக்கிறேன்’ என ஆணும் பெண்ணும் கைகோர்த்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதனால், விஜய் தேவரகொண்டா தன் காதலியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, இருவரும் இதுவரை கருத்து சொல்லவில்லை. சமீபமாக, குஷி படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் நெருக்கமாக பழகி வந்ததாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கத் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT