செய்திகள்

உடல் எடையைக் குறைத்த ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார்.

DIN

தமிழில் 'இறுதிச்சுற்று' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார். 

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். 

உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவர் ரித்திகா. சமீபத்தில் சிறிது உடல் எடை கூடியதற்காக தற்போது தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், தன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார்.

கலாபக்காரன் பாடலில் எடையுடன் காணப்பட்ட ரித்திகா, தற்போது மீண்டும் பழைய உடலமைப்புக்கு வந்தது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

SCROLL FOR NEXT