செய்திகள்

இந்த வார டிஆர்பி: முதலிடத்தில் புதிய சீரியல்!

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

DIN

வெள்ளித்திரையைப் போலவே சின்னத்திரைக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், முதல் 5 இடங்களை பிடித்த தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

சன் டிவியின் புதிய சீரியலான சிங்கப் பெண்ணே தொடர் 11.20 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. கயல் சீரியல் 10.34 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

அண்ணன் - தங்கை இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் வானத்தைப் போல சீரியல் 9.88 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திலும், எதிர் நீச்சல் தொடர் 9.78 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

சுந்தரி தொடர் 9.66 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பெற்றுள்ளது.  சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 5 இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ. 5.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் வழங்கினாா்

பென்னாகரம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கேஜரிவால் சட்டவிரோத விளம்பரப்பலகைகள் வைத்ததாக புகாா்: விசாரணை ஒத்திவைப்பு

எஸ்ஐஆா் பணி: அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT