முகப்பு
செய்திகள்

அனிமல் வெற்றி.. ஃபைட்டர் அப்டேட் கொடுத்த அனில் கபூர்!

நடிகர் அனில் கபூரின் புதிய படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:22 PM
பகிர்:

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை, உலகளவில் இப்படம் ரூ.425 கோடியை வசூலித்துள்ளது. இதில், ரன்பிர் கபூருக்கு தந்தையாக நடித்த நடிகர் அனில் கபூரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அனில் கபூர் நடித்த ‘ஃபைட்டர்’ படத்தின் அவருக்கான போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள இப்படத்தில் ‘ராக்கி’ என்கிற கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படம் ஜனவரி 25, 2024-ல் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.