செய்திகள்

என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை: நடிகை அனுயா

DIN

மஹேக் என்கிற ஹிந்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுயா பக்வத். தமிழில் ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றார். அதன்பின், நாயகியாக நடித்த ‘மதுரை சம்பவம்’ படத்திலும் கவனிக்கும்படியான நடிப்பை வழங்கியிருந்தார். தொடர்ந்து, வெளியான படங்கள் தோல்வியடைந்ததால் சினிமாவிலிருந்து விலகினார். 

தமிழ் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது, சில சீரியல்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், சமீபத்தில் அனுயா இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், “எனக்கு தமிழ் கொஞ்சம்தான் தெரியும். நான் துபையில் பிறந்தவள். என் அப்பா பக்வத் மருத்துவர். என் அம்மா பயிற்சி மருத்துவராக இருக்கிறார். பொறியியல் படிப்பு முடித்ததும் நான் சினிமாவுக்குள் வந்தேன்.  நான் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சுந்தர்.சி, ஹரிகுமார் மற்றும் ஜீவா ஆகியோருடன் உறவில் இருந்ததாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதெல்லாம், தவறான தகவல்கள். நான்  தனியாகத்தான் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதனைக் கண்ட ரசிகர்கள், “நீங்கள் ஏன் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்துகொள்ளலாமே?” எனக் கேள்வியெழுப்பினர். இதற்கு அனுயா, “என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை” எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீா்ப்பை டிரம்ப் மதிக்க வேண்டும்: பைடன் வலியுறுத்தல்

தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளா் பணி: ஜூன் 21-க்குள் விண்ணப்பிக்கலாம்

நபாா்டு வங்கியின் மண்டலத் தலைமைப் பொதுமேலாளராக ரா. ஆனந்த் பொறுப்பேற்றாா்

சென்னையில் அறிவிக்கப்படாத மின்தடை: மக்கள் கடும் அவதி

மின்நுகா்வோா் குறைகளை தெரிவிக்க புதிய கைப்பேசி எண்

SCROLL FOR NEXT