முகப்பு
செய்திகள்

மறுவெளியீடான 3 படங்கள்!

முத்து, ஆளவந்தான், புதுப்பேட்டை ஆகிய மூன்று படங்கள் இன்று மறுவெளியீடாகியுள்ளன

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:23 PM
பகிர்:

புதிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது சாதாரணம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய, நன்றாக இருந்தும் கவனிக்கப்படாத திரைப்படங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதனால், அப்படி வெற்றிபெற்ற படங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. நட்சத்திர நடிகர்களின் பிறந்தநாளுக்கு மட்டுமே அவர்கள் நடிப்பில் உருவான பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது மறுவெளியீட்டிலும் பல படங்கள் வசூல் ஈட்டி வருவதால் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் மெருகூட்டலுடன் தைரியமாக படங்களை வெளியிடுகின்றனர்.

இதையும் படிக்க: கங்குவாவிலும் பாபி தியால்!

Advertisement

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த முத்து, வித்தியாசமான முயற்சியில் கவனம்பெற்ற கமல்ஹாசனின் ஆளவந்தான், வடசென்னை ரௌடிகளின் வாழ்க்கையை அரசியலுடன் இணைத்து விமர்சகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய தனுஷின் புதுப்பேட்டை ஆகிய படங்கள் இன்று பல திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன.

இதனால், அந்தந்த படங்களின் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments