செய்திகள்

கண்ணகி படத்திலிருந்து வெளியான ‘கொப்புறானே’ பாடல் விடியோ!

நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி படத்தின் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து உள்ளனர். 

கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்தப் படத்தில் நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளார்கள். நான்கு பெண்கள், நான்கு சூழ்நிலைகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

ஸ்க மூன், இ5 இணைந்து தயாரித்துள்ள கண்ணகி படத்தினை ஷக்தி ஃபிலிம் பேக்டரி டிச.15ஆம் நாள் வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் டிரைலரை இயக்குநர்கள் க்ருத்திகா உதயநிதி, மோகன் ராஜா, மாரி செல்வராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்கள். 

இந்நிலையில் படத்திலிருந்து ‘கொப்புறானே’ என்றப் பாடல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT