செய்திகள்

வாடிவாசலுக்குத் தயாராகும் வெற்றிமாறன்!

DIN

நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். 

சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது.

மேலும், கங்குவா படத்துக்குப் பின் சுதா கொங்காரா படத்தில் சூர்யா நடிக்கிறார். 

வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை - 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை பணிகளை முழுவதுமாக வெற்றிமாறன் முடித்து விட்டதாகவும் அதற்காக நடிகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

நேபாளம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா?- எஸ்.பி. வேலுமணி விளக்கம்

SCROLL FOR NEXT