செய்திகள்

கேப்டன் மில்லர் இசை வெளியீட்டுத் தேதி இதுதானா?

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது

DIN


அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு  கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதன் டிரைலர் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கேப்டன் மில்லரின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் நிகழ்வை ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

SCROLL FOR NEXT