முகப்பு
செய்திகள்

சலார் முதல் பாடல்!

சலார் படத்தின் முதல் பாடலான சூரியன் குடைய நீட்டி பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. 

சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்தில் நடிகர் யஷ் நடித்ததுள்ளதை படத்தில் பணியாற்றிய பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான தீர்த்தா சுபாஷ் என்பவர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘சூரியன் குடைய நீட்டி’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மதுரகவி எழுதிய இப்பாடலை ஜரா உடுப்பி பாடியிருக்கிறார். இசை - ரவி பஸ்ருர்.

முழு கட்டுரையைப் படிக்க →