இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.
தனுஷ், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தனுஷ் தெரிவித்துள்ளார். இப்படத்தை முடித்த பின், இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.