முகப்பு
செய்திகள்

வெளியானது அருள்நிதியின் ‘டிமான்ட்டி காலனி 2’ பட டிரைலர்

 அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:27 PM
பகிர்:

 அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதன் முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள் நிதி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

மேலும் படத்தில் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.  இந்த நிலையில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.