செய்திகள்

தொடர்ந்து முதலிடத்தில் சிங்கப் பெண்ணே தொடர்: இந்த வார டிஆர்பி!

வெள்ளித்திரையைப் போலவே சின்னத்திரைக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

DIN

வெள்ளித்திரையைப் போலவே சின்னத்திரைக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், முதல் 10 இடங்களை பிடித்த தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

சன் டிவியின் புதிய சீரியலான சிங்கப் பெண்ணே தொடர் 10.79 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கயல் சீரியல் 10.10 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

சுந்தரி சீரியல் 9.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

எதிர் நீச்சல் தொடர் 9.18 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து நான்காவது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

வானத்தைப் போல சீரியல் 8.88 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

இனியா மற்றும் ஆனந்த ராகம் தொடர்கள் 8.05, 7.37  டிஆர்பி புள்ளிகளைப் பெற்று சென்ற வாரத்தைப் போல 6 மற்றும் 7 ஆம் இடங்களை பிடித்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 7.21 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் 7.03 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. ஆஹா கல்யாணம் தொடர் 6.61 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 7 இடங்களை பிடித்துள்ளது. அடுத்த 3 இடங்களை விஜய் டிவியின் தொடர்கள் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT