செய்திகள்

நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குநருடன் இணைந்த மணிகண்டன்!

பிரபல யூடியூப் இயக்குநருடன் இணைந்து நடிகர் மணிகண்டனின் புதிய படம் உருவாக உள்ளது. 

DIN

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

தற்போது, மணிகண்டன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பிரபுராம் வயாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

மேலும், இப்படத்தில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மணிகண்டன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குநருடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து நக்கலைட்ஸ் ராஜேஷ்வர் காளிசாமி கூறியதாவது: 

பயணம் குறித்த கதைகள் பெரும்பாலும் ஆக்‌ஷன் அல்லது த்ரில்லர் கதைகளாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தின் ஆணை மையமாக வைத்து ஃபேமலி எண்டர்டெயின்மென்டாக இந்தப் படத்தினை உருவாக்க இருக்கிறோம். 

குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். பிட்ட கதலு படத்தில் நடித்த சான்வே மேகனா நாயகியாக நடிக்கிறார். கோயம்புத்தூரைச் சுற்றி படமாக்க உள்ளோம். 2017இல் இருந்து இந்த கதையை உருவாகி வருகிறோம். நானும் பிரசன்னாவும் எழுத்தாளர்- இயக்குநராக சினிமாவில் அறிமுகமாக  திட்டமிட்டு வந்தோம். தற்போது நிஜமாகிறது எனக் கூறினார். 

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய வைஷக் ராஜேஸ்வர் இசையமைக்க இருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT