செய்திகள்

தள்ளிப்போனது சலார் ரிலீஸ் டிரைலர்!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்தின் ரிலீஸ் டிரைலர் தள்ளிப்போகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

DIN

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல்  நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. 

சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்திருந்தது. 

டிரைலர் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.  2 மணி நேரம், 55 நிமிஷங்கள், 22 நொடிகள் ரன்னிங் டைமாக உருவாகியிருக்கிறது. தீவிரமான சண்டைக்கு தயாராகுங்கள் என படக்குழு கூறியுள்ளது. 

5 மொழிகளிலும் முதல் பாடல் டிச.13இல் வெளியானது. தமிழில் ஆகாச சூரியன் எனும் பெயரில் வெளியானது.

படத்தின் இறுதி வசனம் என்றழைக்கப்பட்ட ‘ரிலீஸ் டிரைலர்’ இன்று காலை 10.42க்கு வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு வெளியாகுமென  படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT