செய்திகள்

வாரணம் ஆயிரம் மறுவெளியீட்டைக் கொண்டாடும் ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் உருவான வாரணம் ஆயிரம் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம்.

அப்பா - மகனுக்கு இடையேயான உறவின் நெருக்கத்தை வாழ்க்கைப் பிரச்னைகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரத்திலும் சூர்யாவே நடித்து அசத்தியிருந்தார். 

இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இன்றும் நீடிக்கிறது. காதல், அதன் பிரிவு என உணர்ச்சிகளின் வேகத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த விதத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், இப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில், பிரபல திரையரங்கில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரைக்கு முன் ஆடி தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வார இறுதி வரை டிக்கெட்களும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டையில் வை. நாடிமுத்துபிள்ளை உருவச்சிலை திறப்பு! முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

தவெக வைப்புத் தொகையை இழக்கும்: அா்ஜூன் சம்பத்!

கட்சிகளின் தோ்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2025-இல் 7,667 புலம்பெயா் அகதிகள் உயிரிழப்பு: ஐ.நா.

நீதிபதி பதவிநீக்க விவகாரம்: விசாரணைக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT