முகப்பு
செய்திகள்

தங்கலான் வெளியீட்டுத் தேதி மாற்றம்?

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:29 PM
பகிர்:

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதில் இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படம் வருகிற ஜனவரி 26, 2024-ல் வெளியாக இருந்தது. இந்நிலையில், தங்கலான் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் மார்ச் மாதத்திற்கு படத்தை ஒத்திவைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →