செய்திகள்

யோகிபாபுவின் குய்கோ: இந்த வார ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

என்னதான் வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர்கள் வித்தார்த், யோகி பாபு நடித்துள்ள குய்கோ திரைப்படத்தை ஏஎஸ்டி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் இன்று(டிச. 22) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஜீ-5 தளத்தில் கடந்த நவ. 17 ஆம் தேதி வெளியான கோஸ்ட் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

வைஷ்ணவ் தேஜ், ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய ஆதிகேசவா திரைப்படம் இன்று  நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

ரெபெல் மூன்  முதல் பாகம்  நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பார்பி திரைப்படம் ஜியோ சினிமாவில் நேற்று(டிச. 21) வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT