முகப்பு
செய்திகள்

நடிகர் போண்டா மணி காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இன்று காலமானார்.

செய்திகள்

நடிகர் போண்டா மணி காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இன்று காலமானார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:31 PM
பகிர்:

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி  உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

சென்னையில் அவரது வீட்டில் மயங்கி விழுந்தவரை உடனடியாக மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். நீண்ட நாள்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

60 வயதான போண்டா மணி, 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நடிகர் வடிவேலு நடித்த படங்களில் துணை நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.

வின்னர், ஏய், வசீகரா, பிறகு ஆகிய படங்களில் போண்டா மணியின் நகைச்சுவை பெரிதாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக, ‘அடிச்சுகூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க’ என்கிற இவரது வசனம் மிகப் பிரபலம்.  போண்டா மணியின் இயற்பெயர் கேதீஸ்வரன். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →