செய்திகள்

வியக்கத்தக்க மாஸ் திரைப்படம்: சலார் குறித்து ரிஷப் ஷெட்டி புகழாரம்!

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சலார் படம் குறித்து காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி புகழ்ந்து பதிவிட்டுள்ளார். 

DIN

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம் நாளை ( டிச.22 ) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சலார் படம் குறித்து தனது எக்ஸ் பதிவில் காந்தாரா நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி புகழ்ந்து பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதவில், “சலார் வியக்கத்தக்க மாஸ் படமாக சலார் இருக்கிறது. சிறப்பாக நடித்த பிரபாஸுக்கு பாராட்டுகள். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அசத்திய பிருத்விராஜ் சாருக்கும் பாராட்டுகள். இரண்டு நண்பர்களை பற்றிய அழகான படத்துக்கு பிரசாந்த் நீலை கட்டியணைக்க தோன்றுகிறது. தயாரிப்பாளர் விஜய் அண்ணா, ஹொம்பாலே ஃபிலிம்ஸிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT