செய்திகள்

பிக்பாஸ் பூர்ணிமாவின் புதிய படம்! 

பிக்பாஸ் சீசன் 7-இல் பிரபலமாக இருக்கும் போட்டியாளர் பூர்ணிமாவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

பிக்பாஸ் சீசன் 7-இல் பிரபலமாக இருக்கும் போட்டியாளர் பூர்ணிமாவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

வேலூரில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா ரவி அராத்து ஆனந்தியாக ‘அராத்தி’ எனும் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானார். அவரது விடியோக்களுக்கு இன்றும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சேனலுக்கு 27.7 இலட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். 

முதன்முதலாக 2021இல் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நடிகை நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தற்போது தமிழில் வெளியாகும் பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.  முக்கியமான வலுவான போட்டியாளராக பூர்ணிமா ரவி இருக்கிறார். கடைசி 10 போட்டியாளர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். மாயாவுடன் அவர் சேர்ந்து அடிக்கும் கலாட்டாக்களுக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள் அதனை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். 

இந்நிலையில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலின் புகழ்பெற்ற குழுவினர் ராஜேஸ்வர் காளிசாமி, பிரசன்னா பாலசந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள செவப்பி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை எம்.எஸ்.ராஜா இயக்கியுள்ளார். இவருடன் சில நேரங்களில் சில மனிதர்கள். ஓ2 ஆகிய படத்தில் நடித்துள்ள ரிஷி காந்த நடித்துள்ளார். 

ஆஹா தமிழ் ஓடிடியில் விரைவில் வெளியாகுமெனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை நீடிக்கும்!

அனல் மின்ஊழியா்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை: மின்வாரியம் உத்தரவு!

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

SCROLL FOR NEXT