செய்திகள்

எதிர்நீச்சல் நடிகையின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை மதுமிதா கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதோடு, தான் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

DIN

எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை மதுமிதா கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதோடு, தான் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச. 25) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சினிமா மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பலரும் உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களைப் பதிவிட்டு தங்களின் ரசிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை மதுமிதா தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வீட்டில் குடில் அமைத்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் மரம், மான், பரிசுப்பொருள்களுடன் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் அவர் நின்றிருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

படங்களுடன் மதுமிதா வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் நிறைந்த காலம் அமையட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT