முகப்பு
செய்திகள்

விஜயகாந்த் மறைவு: நடிகர் சூர்யாவின் உருக்கமான விடியோ!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா உருக்கமான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா உருக்கமான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், "அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!" எனத் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் சத்யராஜ், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், கவுண்டமணி, கருணாஸ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →