டன்கி ரூ.300 கோடி வசூல்!
ஷாருக்கான் நடிப்பில் உருவான டன்கி திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்துள்ளது.
செய்திகள்டன்கி ரூ.300 கோடி வசூல்!
ஷாருக்கான் நடிப்பில் உருவான டன்கி திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்துள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் கடந்த டிச. 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
உலகளவில் வெளியான இப்படம் இதுவரை விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுது.
இதையும் படிக்க: நடிகர் விஜய் மீது காலணி வீச்சு!
இந்நிலையில், படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.305 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.