செய்திகள்

நடிகர் பிரபாஸின் 24வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிமுக போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. 

சலார் படத்துக்குப் பிறகு கல்கி படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரபாஸின் 24வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றப் பார்வை போஸ்டர் வரும் பொங்களுக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

படத்தில் நடித்துள்ள மற்றவர்கள் குறித்து படக்குழு விவரங்களை எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தினை மருதி இயக்கி வருகிறார். 

பிரபாஸின் 25வது படம் அனிமல் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

SCROLL FOR NEXT