செய்திகள்

முடிவுக்கு வருகிறது 'பாரதி கண்ணம்மா'! இறுதிக்காட்சிகளில் ஆர்.ஜே. பாலாஜி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் ஒருசில எபிஸோடுகளில் இந்த தொடர் முடிவுக்கு வரும் நிலையில், கடைசிக் காட்சிகளில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 முதல் பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சி தொடர்களில் டிஆர்பி பட்டியலில் இந்த தொடர் தொடர்ந்து முதலிடம் பிடித்துவந்தது. 

எனினும் இந்த தொடரில் நாயகியாக நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன் விலகியதைத் தொடர்ந்து, இந்த தொடர் டிஆர்பி பட்டியலில் சற்று சறுக்கல்களை சந்தித்தது. 

எனினும் டிஆர்பி பட்டியலிலுள்ள முதல் 10 இடங்களில் பாரதி கண்ணம்மா தொடர் இடம்பிடித்திருந்தது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இறுதிக்காட்சிகளில் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம்பிடித்த ஷிவின் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT