இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல்வேறு படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இரண்டாவது படமாக இயக்கவிருக்கும் படத்தையும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோ மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடேட் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தின் தலைப்பு தண்டகாரண்யம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.