செய்திகள்

விழா நடத்துனர்களுக்கு கோரிக்கை விடுத்த திவ்யதர்ஷினி! 

DIN

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  

சென்னை தனியார் கல்லுரியில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடல்கள் வெளியிடப்பட்டன.நடிகர்கள் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லுரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளர் தொகுப்பாளினிக்கு இந்த மாதிரி நிகழ்ச்சியில் 5 மணி நேரம் நிற்க வேண்டியுள்ளதால் உட்கார நாற்காலி வேண்டுமென பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளதாவது: 

சமீப நாட்களில் நீங்கள் காட்டிய அனைத்து அன்புதான் இதை பதிவிட தூண்டியது.இது வாத்தி ஆடியோ வெளியீட்டு படம். நிகழ்ச்சி நடக்கும் போது இப்படித்தான் நான் பேப்பரில் எழுதுகிறேன்.பல மணிநேரம் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் எனது சக தொகுப்பாளர்கள் அனைவருக்கும் எளிமையான வேலை அல்ல இது.5 மணிநேரம் நின்று நிகழ்ச்சிகளை நடத்தும் தொகுப்பாளர்களுக்கு (பார்வையாளர்களிடமிருந்து நிற்பது போல் தெரிகிறது)இருக்கை ஏற்பாடுகளை வழங்குமாறு விழா நடத்துனர்களை கேட்டுக்கொள்கிறேன். இது அவர்களுக்கு நீண்ட நேரம் வேலை செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலசீமியாவால் உலகளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

புகாா்களைப் புறக்கணித்த தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா.வில் தீா்மானம் நிறைவேற்றம்

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

SCROLL FOR NEXT