செய்திகள்

வாரிசு வசூல்: லேட்டஸ்ட் அப்டேட்!

உலகம் முழுவதும் வாரிசு படம் ரூ.300 கோடி வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

DIN

உலகம் முழுவதும் வாரிசு படம் ரூ.300 கோடி வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்து விட்டது. தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் ஜன.14இல் வெளியாகியது. 

ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை. தமனின் பாடலுக்கு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை நடனம் ஆடுவதை இணையத்தில் பார்க்க முடிந்தது.

வாரிசு படத்தின் வெற்றியை படக்குழு  கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில், தற்போது வாரிசு படம் வெளியாகி 26 நாள்களான நிலையில் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT