14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இணையும் படத்திற்கு ‘லியோ’ எனப் பெயரிடப்பட்ட ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இந்தப் படம் விஜய்க்கு மட்டுமல்ல நடிகை த்ரிஷாவுக்கும் 67வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்த அப்டேட்!
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
படக்குழுவினர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விடியோ வைரலானது.
இந்நிலையில் மூன்றே நாளில் நடிகை த்ரிஷா சென்னைக்கு திரும்பியுள்ளதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. காஷ்மீர் குளிர் அதிகாமாக இருந்ததால் த்ரிஷாவுக்கு உடல்நிலை பாதித்ததாகவும் அதனால் சென்னைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சிலர் படப்பிடிப்பு முடிந்த பிறகே த்ரிஷா சென்னை திரும்பியுள்ளதாகவும் சிலர் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.