செய்திகள்

வசூல் வேட்டையில் புதிய உச்சம் தொட்ட பதான்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலக அளவில் ரூ.901 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலக அளவில் ரூ.901 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். இந்தப் படத்தினை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு விஷால் & ஷேகர் இசையமைத்துள்ளனர். 

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. உலகம் முழுவதும் பிப்.3ஆம் தேதி வரை பதான் திரைப்படம் ரூ.696 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்திருந்தது. இந்தியாவில் ரூ.436 கோடியும், வெளிநாடுகளில் ரூ.260 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பதான் திரைப்படம் உலக அளவில் ரூ.901 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் கூறியதாவது: உலக அளவில் பதான் திரைப்படம் ரூ.901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ரூ.558.40 கோடியும், வெளிநாடுகளில் ரூ.342.60 கோடியும் வசூலித்துள்ளது. ஹிந்தி சினிமா வரலாற்றில் பதான் திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT