செய்திகள்

'மீனாட்சி பொண்ணுங்க' ஒளிபரப்பு நேரம், மீண்டும் மாற்றம்!

புதிய தொடராக 'சீதா ராமன்' ஒளிபரப்பாகவுள்ளதைத் தொடர்ந்து இந்த நேர மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமைமுதல் புதிய நேரத்தில் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடர் ஒளிபரப்பாகும். 

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ''மீனாட்சி பொண்ணுங்க'' தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி மாற்றியமைத்துள்ளது. 

புதிய தொடராக 'சீதா ராமன்' ஒளிபரப்பாகவுள்ளதைத் தொடர்ந்து இந்த நேர மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமைமுதல் புதிய நேரத்தில் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடர் ஒளிபரப்பாகும். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய நேரமான பிரைம் டைம் சீரியல்களில் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடர் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்தத் தொடரில் அர்ச்சனா, செளந்தர்யா ரெட்டி, ஆர்யன் உள்ளிட்டோர் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் இடம்பெறும் செளந்தர்யா - ஆர்யன் (சீரியலில் சக்தி - வெற்றி) இடையேயான காதல் காட்சிகள் இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.

'மீனாட்சி பொண்ணுங்க' தொடர் கடந்த சில நாள்களாக 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது பழைய படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனத் தகவல் தெரியவந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT