செய்திகள்

ஜேம்ஸ் கேமரூனின் ஆண்டு வருமானம் இவ்வளவா?

அதிகம் சம்பாதிக்கும் கலைஞர்கள் பட்டியலில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இடம்பெற்றுள்ளார்.

DIN

அதிகம் சம்பாதிக்கும் கலைஞர்கள் பட்டியலில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இடம்பெற்றுள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார்.

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில்  டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது. 

மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம்  உலகளவில் இதுவரை ரூ.18,200 கோடியையும் இந்தியாவில் ரூ.500 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிகை 2022 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை ஈட்டிய கலைஞர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், பிரபல இசைக்குழுவான ஜெனிசிஸ் 230 மில்லியன் டாலர் (ரூ.1905 கோடி) வருவாயை ஈட்டி முதலிடத்தில் உள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் 100 மில்லியன் டாலர்களுடன் (ரூ.828 கோடி) 6 இடத்திலும் பிரம்மாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் 95 மில்லியன் டாலர்களுடன் (ரூ.727 கோடி) 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT