முகப்பு
செய்திகள்

’டாடா உணர்வுப்பூர்வமான படம்..’: பிரபல நடிகர் கருத்து

பிக் பாஸ் கவினின் டாடா திரைப்படம் குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

பிக் பாஸ் கவினின் டாடா திரைப்படம் குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு ’டாடா’ படத்தை இயக்கியுள்ளார். கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டாடா திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகி, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல்  4 நாள்களில் ரூ.8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், ‘டாடா திரைப்படம் பார்த்தேன். உணர்ப்பூர்வமாக தொட்டது. குடும்பத்தினருடன் சென்று பார்க்க மிகச்சிறந்த திரைப்படம். இயக்குநர் கணேஷ் கே.பாபு மற்றும் சிறந்த நடிப்பை வழங்கிய கவின், அபர்ணாதாஸுக்கு வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →