முகப்பு
செய்திகள்

பூஜா ஹெக்டேவின் அசத்தல் ’அரபிக்குத்து’ நடனம்.. வைரல் விடியோ!

அரபிக்குத்து பாடல் வெளியாகி ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி நடிகை பூஜா ஹெக்டே தன் நடன விடியோவை வெளியிட்டுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

அரபிக்குத்து பாடல் வெளியாகி ஓர் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி நடிகை பூஜா ஹெக்டே தன் நடன விடியோவை வெளியிட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது. இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின. 

அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடினர். புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி இந்தப் பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார். இந்த ‘அரபிக் குத்து’ விடியோ பாடல் யூடியூப்பில் 390 மில்லியன்(39 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. 

அரபிக் குத்து விடியோ பாடல் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் இப்பாடலின் வரிகளுக்கு நடனமாடும் படப்பிடிப்பு விடியோவை வெளியிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →