செய்திகள்

ரிஷப் ஷெட்டிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது!

காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

ரூ. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் வெளியான இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்தியா முழுவதும் காந்தாரா படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து காந்தாரா 2ஆம் பாகம் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே ப்லிம்ஸ் சமீபத்தில் தெரிவித்த நிலையில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயா்: அரசு உத்தரவு

SCROLL FOR NEXT