செய்திகள்

துல்கர் சல்மானுக்கு தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா விருது!

நடிகர் துல்கர் சல்மானுக்கு தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் துல்கர் சல்மானுக்கு தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘சீதாராமம்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது, 'கிங்க் ஆஃப் கோதா’ படத்தில் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் வெளியான ‘சுப்’ படத்தில் துல்கர் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில், சிறந்த எதிர்மறைக் கதாபாத்திரத்திற்கான பிரிவில் துல்கர் சல்மானுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது. 

இந்த விருது விழாவில் சிறந்த நடிகர் -  ரன்பீர் கபூர், சிறந்த நடிகை - ஆலியா பட், நம்பிக்கைக்குரிய நடிகர் - ரிஷப் ஷெட்டி ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT