செய்திகள்

மூன்று நிமிடங்களில் 184 சுயபடம்: கின்னஸ் சாதனையை முறியடித்த அக்ஷய் குமார்!

பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் மூன்று நிமிடங்களில் அதிக சுயபடங்களை எடுத்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். 

IANS

பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் மூன்று நிமிடங்களில் அதிக சுயபடங்களை எடுத்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். 

நடிகர் அக்ஷய் குமார் நடித்த 'செல்பி' படத்தின் விளம்பரத்திற்காக மும்பையில் ரசிகர்களை சந்தித்தபோது, தனது ரசிகர்களுடன் மூன்றே நிமிடங்களில் 184 சுயபடத்தை எடுத்துள்ளார். 

கடந்த 2018 ஜனவரியில் கார்னிவல் ட்ரீம் பயணக் கப்பலில் அமெரிக்காவின் ஜேம்ஸ் ஸ்மித் மூன்று நிமிடங்களில் 168 சுய படங்களை எடுத்து உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றார். மேலும், 2015ல் லண்டனில் உள்ள சான் ஆண்ட்ரியாஸின் முதல் காட்சியில் ஹாலிவுட் நடிகரான டுவைன் ஜான்சன் மூன்று நிமிடங்களில் 105 சுய படங்களை எடுத்து இந்த சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளையும் நடிகர் அக்ஷய் குமார் முறியடித்துள்ளார். 

இதுதொடர்பாக அக்ஷய் கூறியதாவது, 

இந்த தனித்துவமான உலக சாதனையை முறியடித்த இந்த தருணத்தை எனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இதுவரை சாதித்த அனைத்தும், என் வாழ்க்கையின் இந்த தருணத்தில் என்னுடன் இருக்கும் ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பும் ஆதரவே காரணம் என்றார். 

'செல்பி' படம் பிப்ரவரி 24-ம் தேதியன்று திரையில் வெளியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT